news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்

02 Oct, 2026
-மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் 

நாளை (03) சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (02) இரவு மதுபானசாலைகள் வழமையாக மூடப்படும் நேரத்திலிருந்து, எதிர்வரும் அக்டோபர் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் வழமையாகத் திறக்கப்படும் நேரம் வரை இந்தத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாளை (03) சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்

இந்தத் தடையுத்தரவை மீறி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மதுபான நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அது குறித்து பொதுமக்கள் மதுவரித் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!